உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மயக்கமடைந்த மயில்கள் மீட்புவனத்துறையிடம் ஒப்படைப்பு

மயக்கமடைந்த மயில்கள் மீட்புவனத்துறையிடம் ஒப்படைப்பு

மயக்கமடைந்த மயில்கள் மீட்புவனத்துறையிடம் ஒப்படைப்புபோச்சம்பள்ளி:போச்சம்பள்ளி அடுத்த, இந்திரபுரியில் நேற்று காலை, 2 ஆண் மயில்கள் பறக்க முடியாமல் மயக்கமான நிலையில், துடிதுடித்து கொண்டிருந்தன. அதை பார்த்த அப்பகுதி விவசாயிகள், மயில்களை மீட்டு தண்ணீர் குடிக்க வைத்து, மயக்கத்தை தணிக்க முயற்சித்த பின், அவற்றை போச்சம்பள்ளி கால்நடை மருத்துவமனைக்கு, சிகிச்சைக்கு எடுத்துச் சென்றனர். மருத்துவர் சரண்ராஜ் முதலுதவி சிகிச்சை அளித்தார். அப்போது அவர், மாந்தோட்டத்தில் பூக்களை பாதுகாக்க விவசாயிகள் அடித்த மருந்தினால், மயில்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மயில்கள் குறித்து, கிருஷ்ணகிரி வன அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்த நிலையில், அவர்கள் மயில்களை மீட்டு, மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி வன அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை