உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை

அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை

அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கைதொப்பூர்:தொப்பூர் அருகே, அரசு நடுநிலைப்பள்ளியில் நடந்த ஆண்டு விழா நிகழ்ச்சியின் போது, புதிய மாணவர் சேர்க்கையை ஆசிரியர்கள் தொடங்கினர். தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அருகே உள்ள, உம்மியம்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில், பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், தலைமை ஆசிரியர் நரசிம்மன் தலைமை வகித்தார்.நல்லம்பள்ளி வட்டார கல்வி அலுவலர்கள் சுமதி, பரமசிவம், சரவணன் மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் அமுதா, முன்னாள் பஞ்., தலைவர் தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்பள்ளியில், 305 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். நேற்று, புதிய மாணவர் சேர்க்கையை தொடங்கபட்டது. இதில், சுற்றுவட்டார பகுதி பெற்றோர் ஒத்துழைப்புடன் நேற்று முதல் வகுப்பில், 30 மாணவர்கள் சேர்க்கை நடந்தது. முன்னதாக, சேர்க்கைக்கு வந்த மாணவர்களை மாலை அணிவித்து, ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து வந்தனர். சேர்க்கைக்கான பதிவு செய்தபின், சான்றிதழ் வழங்கி கவுரவித்தனர். தொடர்ந்து, ஆண்டு விழாவில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இதில், பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர், மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ