மேலும் செய்திகள்
வெவ்வேறு சம்பவத்தில் சிறுமி உட்பட 2 பேர் மாயம்
29-Mar-2025
போஸ்டர் ஒட்டியவர் மீது வழக்குஓசூர்:ஓசூர் உழவர் சந்தை அருகே, ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. அதில், தி.மு.க., தேர்தல் வாக்குறுதியாக, சீர் மரபினருக்கு ஜாதி சான்றிதழ் வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால், வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்து நான்காண்டுகளாகியும் செய்யவில்லை. இதன் மூலம், தமிழக அரசு, 68 ஜாதிகளை ஏமாற்றியுள்ளது என்ற வாசகங்களுடன், போஸ்டர்கள் ஒட்டி இருந்தனர். இதுகுறித்து ஓசூர் டவுன் வி.ஏ.ஓ., வெங்கடேசமூர்த்தி அளித்த புகார் படி, ஓசூர் டவுன் போலீசார், ஓசூரை சேர்ந்த சீர்மரபினர் நலச்சங்க மாநிலத்தலைவர் ராமசாமி என்பவர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
29-Mar-2025