உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பாராக மாறிய கிருஷ்ணகிரிசிட்கோ வளாகம்

பாராக மாறிய கிருஷ்ணகிரிசிட்கோ வளாகம்

'பாராக' மாறிய கிருஷ்ணகிரிசிட்கோ வளாகம்கிருஷ்ணகிரி :கிருஷ்ணகிரி சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் குடிமகன்கள், 'காஸ் ஸ்டவ்' வைத்து கறி சமைத்தும், மது அருந்தியும், வளாகத்தை 'பாராக' மாற்றி கும்மாளம் அடித்து வருகின்றனர்.கிருஷ்ணகிரி, பெங்களூரு ரோடு பகுதியில் சிட்கோ தொழிற்பேட்டை உள்ளது. இங்கு, 50க்கும் மேற்பட்ட சிறு குறு தொழிற்சாலைகள் உள்ளன. இப்பகுதிக்கு, நான்கு புறமும் வழிகள் உள்ளன. ஒரு பகுதியில் சில தொழிற்சாலைகள் மூடி உள்ளதால், ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும். அதை பயன்படுத்தி அங்கு தினமும், 50க்கும் மேற்பட்டோர் மது அருந்துவதும், சாலையில் செல்வோரிடம் தகராறு செய்வதும் தொடர்கிறது.இது குறித்து அப்பகுதியில், தொழிற்சாலை நடத்துவோர் மற்றும் பணியாளர்கள் கூறியதாவது:கிருஷ்ணகிரி தொழிற்பேட்டைக்கு தினமும் நுாற்றுக்கணக்கானோர் வேலைக்கு வருகின்றனர். பட்டப்பகலில் சாலையில் அமர்ந்து மது அருந்துபவர்களால், அவ்வழியாக செல்லும் பெண்கள் அச்சத்துடன் செல்கின்றனர். கூட்டம், கூட்டமாக வரும் அவர்கள், கையில், 'ஸ்டவ்' மற்றும் இறைச்சி, மதுவை வாங்கி வந்து, அங்கேயே சமைத்து சாப்பிட்டு, மது அருந்தி விட்டு, கழிவுகளை அங்கேயே கொட்டி செல்கின்றனர். இதை யாராவது கேட்டால் தகராறு செய்கின்றனர். போலீசில் புகாரளித்தும் பலனில்லை. திருட்டு தொல்லையும் அதிகரித்துள்ளது. மாவட்ட நிர்வாகம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை