உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், நேற்று அகில இந்திய கோரிக்கை நாள் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் துரை தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் சரவணபவன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் முருகன், மாநில செயற்குழு உறுப்பினர் ஸ்ரீனிவாசலு, பொருளாளர் முனிரத்தினம், செயலாளர் குணசேகரன் ஆகியோர் பேசினர். மாவட்ட இணை செயலாளர் ரங்கநாதன் நன்றி கூறினார்.ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர் அனைவருக்கும், 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஊதியக்குழுவின் பரிந்துரைகளில் இருந்து ஓய்வூதியர்களை நீக்கி வைக்கும் நிதி மசோதாவை, ரத்து செய்ய வேண்டும். உடனடியாக ஊதியக்குழுவை அறிவித்து, மத்திய அரசின், 8வது ஊதியக்குழுவின் பயன்களை ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அரசு ஊழியர்களுக்கு, ஓய்வூதியர்களுக்கு ஊதியக்குழு அமைக்க வேண்டும். சுகாதார காப்பீட்டு திட்டத்தை, தமிழக அரசே நேரடியாக ஏற்று நடத்த வேண்டும். இந்த திட்டப்படி, அனைத்து மருத்துவமனைகளிலும் ஓய்வூதியர்கள் மற்றும் தொகுப்பு ஊதியர்களுக்கு பணமில்லா சிகிச்சை என்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட, 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன கோஷங்களை எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை