மேலும் செய்திகள்
முதல்வர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
11-Mar-2025
ஓசூர் முனீஸ்வரன் கோவில் திருவிழா10,000 பேருக்கு பிரியாணி விருந்துஓசூர்:ஓசூர் மாநகராட்சி, 22வது வார்டுக்கு உட்பட்ட முனீஸ்வர் நகரிலுள்ள முனீஸ்வரன் கோவில் திருவிழா மூன்று நாட்கள் நடந்தது. நேற்று முன்தினம் வ.உ.சி., நகர், முனீஸ்வர் நகர், சீனிவாசா கார்டன், நாதன் நகர், தேஜஸ் நகர், பூஞ்சோலை நகர், அன்னை நகர், ஆதவன் நகர், அக்ஷரா ஹோம்ஸ், சிவக்குமார் நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், 50க்கும் மேற்பட்ட ஆடுகள், 150க்கும் மேற்பட்ட கோழிகளை முனீஸ்வரனுக்கு பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். பலியிடப்பட்ட ஆடுகளை பக்தர்கள் கோவில் நிர்வாகத்திடம் வழங்கினர். ஒரு டன் ஆட்டிறைச்சி கொண்டு பிரியாணி சமைத்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் துவக்கி வைத்தார். மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன் மற்றும் விழா குழுவினர் பக்தர்கள், 10,000 பேருக்கு பிரியாணியை வழங்கினர். அசைவம் சாப்பிடாத, 2,000க்கும் மேற்பட்டோருக்கு சைவ உணவு வழங்கப்பட்டது. மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, முனீஸ்வரன் கோவில் செயலாளர் பிரகாஷ், தலைவர் அண்ணாதுரை, பொருளாளர் முத்துக்குமார் மற்றும் கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.
11-Mar-2025