கி.கிரி மாவட்டத்தில் 2 நாட்கள்பறவைகள் கணக்கெடுப்பு பணி
கி.கிரி மாவட்டத்தில் 2 நாட்கள்பறவைகள் கணக்கெடுப்பு பணிகிருஷ்ணகிரிகிருஷ்ணகிரி மாவட்டத்தில், காப்புக்காடுகள் மற்றும் காப்புக்காடுகளுக்கு வெளியிலும் அதிக எண்ணிக்கையிலான ஈர நிலங்களான, நீர்நிலைகள், தடுப்பணைகள், ஏரிகள், குளங்கள் மற்றும் குட்டைகள் உள்ளன. இவைகளில் பல்வேறு வகையான பறவை இனங்கள் தங்கியும், அவ்வப்போது வந்து செல்வதும் வழக்கமாக கொண்டுள்ளன. அவைகளின் எண்ணக்கை, இனங்கள், எந்த பகுதிகளில் எவ்வகையான பறவையினங்கள் வாழ்கின்றன என்பன போன்ற தகவல்களை கணக்கெடுத்து, அரியவகை இனங்கள் காணப்பட்டால், அவைகளை அழிவிலிருந்து பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை, வனத்துறை மேற்கொண்டு வருகிறது.அதன்படி இந்தாண்டில், தமிழ்நாடு முழுவதும் வனத்துறை மூலம், 2 கட்டங்களாக பறவைகள் கணக்கெடுப்பை நடத்துகிறது. முதற்கட்டமாக, ஈரநில பகுதிகளிலும், 2ம் கட்டமாக, காப்புக்காடு பகுதிகளிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இதன்படி, கிருஷ்ணகிரி மாவட்ட வன உயிரின காப்பாளர் பாகான் ஜெகதீஸ் சுதாகரின் ஆணைக்கிணங்க, கிருஷ்ணகிரி வனச்சரகர் முனியப்பன், வனவர் சிவக்குமார், வனக்காப்பாளர் ஜோதி விநாயகம் உள்பட, 60 பேர் கொண்ட குழுவினர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டத்தில், காப்புக்காடுகளுக்கு வெளியிலுள்ள ஈர நிலப்பகுதிகளான ராமநாயக்கான் ஏரி, கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி அடுத்த தேவசமுத்திரம் ஏரி, கே.ஆர்.பி., அணை, படேதலாவ் ஏரி, சூரிய நாராயணன் ஏரி, பாரூர் ஏரி, பெனுகொண்டாபுரம் ஏரி உள்ளிட்ட, 40 நீர்நிலைகளில், பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது. இதில், 55க்கும் மேற்பட்ட பறவை இனங்கள், தன்னார்வலர்களால் கண்காணிக்கப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளன.