மேலும் செய்திகள்
எஸ்.எப்.ஆர்., கல்லுாரியில் விளையாட்டு விழா
05-Feb-2025
பி.கே.ஆர். மகளிர் கல்லுாரியில்31ம் ஆண்டு விளையாட்டு விழாஈரோடு:கோபி, பி.கே.ஆர். மகளிர் கலை கல்லுாரியில், 31ம் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக, சிறப்பு அதிரடிப்படை டிஜிபி மயில்வாகனன் கலந்து கொண்டார். கல்லுாரி தாளாளர் வெங்கடாச்சலம் விளையாட்டு சுடரை ஏற்றினார். கல்லுாரி துணை முதல்வர் தனலட்சுமி வரவேற்றார்.சிறப்பு விருந்தினர் மாணவர் களுக்கு பல நற்கருத்துக்களை வழங்கினார். இதை தொடர்ந்து, 2024-25ல் ஆண்டின் விளையாட்டுத்துறை ஆண்டறிக்கையை, உடற்கல்வித்துறை பேராசிரியர் சிவரஞ்சனி வழங்கினார். பிரமிடு உருவாக்கம், ஓட்டப்பந்தயம், கலை நிகழ்ச்சி என பல நிகழ்வு நடந்தது.பேராசிரியர் மற்றும் கல்லுாரி ஊழியர்களுக்கும் பலவித போட்டி நடந்தது. வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசு வழங்கப்பட்டது. விழாவில், 1,220 மாணவியர், 100 பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். தமிழ்த்துறை உதவி பேராசிரியர் காயத்ரி நன்றி கூறினார்.
05-Feb-2025