உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூர், தேன்கனிக்கோட்டையில் 850 சிலைகள் பிரதிஷ்டை

ஓசூர், தேன்கனிக்கோட்டையில் 850 சிலைகள் பிரதிஷ்டை

ஓசூர்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஓசூர், தேன்கனிக்கோட்டை உட்கோட்டத்தில், 850க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.ஓசூர், சூளகிரி, பாகலுார், பேரிகை, சிப்காட், ஹட்கோ, மத்திகிரி ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதிகளில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஹிந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் மொத்தம், 500க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று (செப்., 7) பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. அதேபோல், தேன்கனிக்கோட்டை, தளி, அஞ்செட்டி, கெலமங்கலம், ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், 350க்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.இந்த ஆண்டு பிரமாண்ட செட் அமைத்து, ஹிந்து அமைப்பினர், இளைஞர்கள் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய தயாராக உள்ளனர். விநாயகர் சதுர்த்தியான இன்று பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகளை வரும், 10 முதல் நீர்நிலைகளில் கரைக்க போலீசார் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.வரும், 10ல் பாகலுார் பகுதியிலும், 11ல் சூளகிரி, பேரிகையிலும், 12 ல் மத்திகிரியிலும் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளன. ஓசூர் பகுதியில், 100 க்கும் மேற்பட்ட சிலைகள் மட்டும், ஒன்பது நாட்கள் கழித்து வரும், 15 ல், நீர்நிலைகளில் கரைக்கப்படும் என, போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேன்கனிக்கோட்டை உட்கோட்டத்தில் வரும், 10ல் தளி, 11ல் மதகொண்டப்பள்ளி, 14 ல் தேன்கனிக்கோட்டை, 15 ல் கெலமங்கலம் பகுதியில், விநாயகர் சிலைகள் கரைக்கப்பட உள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை