மேலும் செய்திகள்
இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
10-Aug-2024
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ரயில்வே ஸ்டேஷன் எதிரே உள்ள நேரு நகர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் கென்னடி மனைவி பூபதி, 45. இவரது மகன் வெளிநாட்டில் படித்து வருகிறார்; மகள் சுபாஷினி, 23, ஓசூர் அருகே மிண்டா என்ற தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். கடந்த, 2 ல், வீட்டை பூட்டி விட்டு, தன் மகள், தாயுடன், கடலுார் மாவட்டத்தில் உள்ள வள்ளலார் கோவிலுக்கு சென்றார். கடந்த, 4 காலை திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 60 பவுன் நகை மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருந்தது. பூபதி கொடுத்த புகார்படி, ஓசூர் டவுன் போலீசார் அப்பகுதி சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து விசாரித்தனர். இதில், தர்மபுரி நரசய்யர் தெருவில் வசிக்கும், போச்சம்பள்ளி அடுத்த பெண்டரஹள்ளியை சேர்ந்த முகமது சித்திக், 26, நகையை திருடியது தெரிந்தது. அவரை நேற்று கைது செய்த போலீசார், 35 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.
10-Aug-2024