உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / துணிக்கடையில்திருடியவர் கைது

துணிக்கடையில்திருடியவர் கைது

துணிக்கடையில்திருடியவர் கைதுகிருஷ்ணகிரி,:கிருஷ்ணகிரி, பெங்களூரு சாலையிலுள்ள ஒரு துணிக்கடையில் மேலாளராக இருப்பவர் போச்சம்பள்ளியை சேர்ந்த ரஞ்சித்குமார், 31. இவர் கடந்த, 6 இரவில் பணி முடிந்து கடையை மூடி சென்றுள்ளார்.கடையில் யாராவது அத்துமீறி நுழைந்தாலோ, கடை பூட்டை உடைத்தாலோ அவரது மொபைலில் அலர்ட் கொடுக்கும் வசதியை வைத்துள்ளார். நேற்று முன்தினம் அதிகாலை, 3:00 மணியளவில் அவரது மொபைலில் அலர்ட் சத்தம் வந்துள்ளது. உடனடியாக கடைக்கு வந்து பார்த்தபோது, கடையின் பூட்டை உடைத்து, 1,100 ரூபாயை மர்மநபர் திருடி சென்றது தெரிந்தது. கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகாரளித்தார்.விசாரணையில் கடைக்குள் புகுந்து திருடியது கோவை மாவட்டம், கொல்லக்காபாளையத்தை சேர்ந்த ஜஸ்டின் சுந்தர் சிங், 40 என தெரிந்து அவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை