மேலும் செய்திகள்
கற்கள் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்
17-Feb-2025
காத்திருப்பு போராட்டம்ஓசூர்:சூளகிரி அருகே உப்பரதம்மண்டரப்பள்ளி கணபதி நகர், ஓபேபாளையம், துப்புகானப்பள்ளி என்.சங்கர் நகர், தட்சின திருப்பதி, பஸ்தலப்பள்ளி, உத்தனப்பள்ளியில் குடியிருக்கும் மக்களுக்கு குடிநீர், சாலை, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. அவற்றை செய்து கொடுக்க வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க, சூளகிரி வட்ட குழு சார்பில், சூளகிரி ஒன்றிய அலுவலகம் முன், நேற்று காலை முதல் காத்திருப்பு போராட்டம் நடந்தது.வட்ட செயலாளர் முரளி தலைமையில் ஏராளமானோர் கலந்து கொண்டு, கோரிக்கை குறித்து பேசினர். அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதாக பி.டி.ஓ., ராஜேஷ் மூலம் எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கப்பட்டதால் போராட்டம் முடிவுக்கு வந்தது.
17-Feb-2025