மேலும் செய்திகள்
ராணுவத்தில் சேர ஏப்.,10 வரை விண்ணப்பிக்கலாம்
29-Mar-2025
அக்னிவீர் பணிகளுக்கான தேர்வுகிருஷ்ணகிரி:அக்னிவீர் திட்டத்தில் காலியாக உள்ள பணிகளுக்கு வரும், 10 வரை இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் கூறியுள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:இந்திய ராணுவத்தில் அக்னிவீர் பொது பணியாளர், அக்னிவீர் தொழில்நுட்பம், அக்னிவீர் எழுத்தர், கிடங்கு மேலாளர், அக்னிவீர் தொழிலாளி பணிகளுக்கான தேர்வு நடக்கவுள்ளது. ஆர்வமுள்ளவர்கள், www.joinindianarmy.nic.inஎன்ற இணையதளம் மூலம் வரும், 10 வரை விண்ணப்பிக்கலாம்.தேர்வுக்கு கடந்த, 2004 அக்.,1 முதல், 2008 ஏப்.,1க்குள் பிறந்த ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான நுழைவுத்தேர்வு தமிழ் மொழியிலும் நடத்தப்பட உள்ளது. பணிகளுக்கான கல்வித்தகுதி மற்றும் பிற தகுதிகள் தொடர்பான விபரங்கள், www.joinindianarmy.nic.inஎன்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.மேலும், விபரங்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தையோ, 04343 - 291983 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
29-Mar-2025