உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

ஓசூர், ஓசூர், வக்கீல்கள் சங்க கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. தலைவர் சிவசங்கர் தலைமை வகித்தார். செயலாளர் கதிரவன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், ஓசூரில் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடங்கள் கட்டும் பணியை விரைவுப்படுத்த வலியுறுத்தியும், வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றக்கோரியும், நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, ஓசூரில் நேற்று முன்தினம் மற்றும் நேற்று என, 2 நாட்கள், 400க்கும் மேற்பட்ட வக்கீல்கள், நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை