உள்ளூர் செய்திகள்

ஆடி உற்சவ விழா

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில். பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் மாருதி நகரிலுள்ள முத்துமாரியம்மன் கோவிலில், 34ம் ஆண்டு ஆடி உற்சவ விழா கடந்த, 30ம் தேதி துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை, ஹோமம், அபிஷேக, அலங்காரம் நடந்தது. நேற்று முன்தினம் காலை, 11:00 மணிக்கு, ராம்நகரிலிருந்து தாய் வீட்டு சீதனம் கொண்டு வரப்பட்டு, அம்மனுக்கு விசேஷ பூஜைகள் நடந்தன. நேற்று மதியம், 2:00 மணிக்கு, ஓசூர் ராம்நகர் கோட்டை மாரியம்மன் கோவிலில் இருந்து, சக்தி கரகம், பால்குடம், அக்னி கரகம் எடுத்து, முத்து மாரியம்மன் கோவிலுக்கு பெண்கள் ஊர்வலமாக சென்றனர்.மேலும், காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள், முதுகில் அலகு குத்தி கிரேனில் தொங்கியபடி கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை, ஆலய கமிட்டி உறுப்பினர்கள் மணி, ராமமூர்த்தி, முருகன், கார்த்திக், குமார், கோவில் அர்ச்சகர் சீனிவாசன் உட்பட பலர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை