உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கார் கவிழ்ந்து விபத்து 222 கிலோ குட்கா பறிமுதல்

கார் கவிழ்ந்து விபத்து 222 கிலோ குட்கா பறிமுதல்

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, சாமல்பட்டி ரயில்வே மேம்பாலம் பகுதியில், பெங்களூரு-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில், கர்நாடக பதிவெண் கொண்ட கார், நிலை தடுமாறி சாலையின் பக்கவாட்டு தடுப்பு கம்பியில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த காரில் பயணம் செய்த நபர்கள் தப்பி ஓடினர். இதையடுத்து, வாகன ஓட்டிகள் அளித்த தகவல்படி, சம்பவ பகுதிக்கு ஊத்தங்கரை போலீஸ் டி.எஸ்.பி., சீனிவாசன் மற்றும் போலீசார் காரை சோதனை செய்தபோது, 170 கிலோ ஹான்ஸ் பாக்கெட்டுகள், 52 கிலோ விமல் பாக்கு பொருட்கள் இருந்தது. பொருட்களை பறிமுதல் செய்த சாமல்பட்டி போலீசார், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி