மேலும் செய்திகள்
ரேஷன் அரிசி கடத்தல் மும்மடங்கு வழக்குகள்
04-Apr-2025
கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்கிருஷ்ணகிரி, கி.கிரி மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., வடிவேல் தலைமையில் இன்ஸ்பெக்டர் சங்கீதா, எஸ்.ஐ.,க்கள் ஞானபிரகாஷ், வள்ளியம்மாள், கதிரவன் ஆகியோர் குருபரப்பள்ளி மேம்பாலம் அருகே, வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இரு பிக்கப் வாகனங்களை சோதனையிட்டதில், 4 டன் ரேஷன் அரிசி கர்நாடகத்திற்கு கடத்த முயன்றது தெரிந்தது. விசாரணையில் அரிசியை கடத்தியது பெத்ததாளப்பள்ளியை சேர்ந்த கோவிந்தராஜ், 34, மற்றும் 18, 17 வயதுடைய இருவர் என மூன்று பேரை கைது செய்து, அரிசியுடன் பிக்கப் வேன்களை பறிமுதல் செய்தனர்.
04-Apr-2025