| ADDED : ஜூன் 19, 2024 10:27 AM
ஓசூர்: ஓசூர் மாவட்ட கால்நடை பண்ணையில் கழிவு செய்யப்பட்ட, 43 மாடுகள் பொது ஏலம் விடப்பட இருப்பதாக, மாவட்ட கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மத்திகிரியிலுள்ள மாவட்ட கால்நடை பண்ணையில் கழிவு செய்யப்பட்ட, 43 மாடுகள் வரும், 26 காலை, 10:00 மணிக்கு, பண்ணை பிரிவுகளில் ஏலக்குழுவினர் முன்னிலையில் பொது ஏலம் விடப்படுகிறது. இதில் கலந்து கொள்ள விரும்பும் பொதுமக்கள், 10,000 ரூபாயை முன்வைப்பு தொகையாக வழங்க வேண்டும். முன்வைப்பு தொகை வரைவோலையாக மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். 'துணை இயக்குனர், மாவட்ட கால்நடை பண்ணை, ஓசூர்' என்ற பெயருக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் வரைவோலை எடுத்து, மாவட்ட கால்நடை பண்ணை துணை இயக்குனர் அலுவலகத்தில் வரும், 25 மாலை, 5:00 மணிக்குள் வழங்க வேண்டும்.பொது ஏலம் தொடர்பான கூடுதல் விபரங்கள் தேவைப்படும் பட்சத்தில், ஓசூர் மத்திகிரியில் உள்ள மாவட்ட கால்நடை பண்ணை துணை இயக்குனர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04344 296832 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். பொது ஏலம் தொடர்பான நிபந்தனைகள் மற்றும் விபரங்கள், கால்நடை பராமரிப்புத்துறையின் அனைத்து மண்டல இணை இயக்குனர் அலுவலகங்கள் மற்றும் உதவி இயக்குனர் அலுவலகங்களின் விளம்பர பலகைகளில் ஒட்டப்பட்டிருக்கும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.