உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மகளிர் திட்டம் சார்பில் ரூ.58.92 கோடி வங்கி கடன்

மகளிர் திட்டம் சார்பில் ரூ.58.92 கோடி வங்கி கடன்

தர்மபுரி: தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்க துறை அமைச்சர் உதயநிதி மதுரையில் நேற்று கணொளி காட்சி மூலம், மகளிர் சுய உதவிக்கு-ழுக்களுக்கு வங்கிக்கடன் உதவிகள் வழங்கும் பணியை துவக்கி வைத்தார். அதை தொடர்ந்து, தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் தாலுகா, பைசுஹள்ளி தனியார் திருமண மண்டபத்தில், மகளிர் திட்டம் சார்பில், மகளிர் சுய உதவிக்குழு வங்கிக்கடன் உதவி-களை கலெக்டர் சாந்தி வழங்கினார்.இதில், தர்மபுரி ஒன்றியத்தில், 28, ஏரியூர், 13, அரூர், 17, கடத்துார், 28, காரிமங்கலம், 27, மொரப்பூர், 35, நல்லம்பள்ளி, 23, பாலக்கோடு, 66, பாப்பிரெட்டிப்பட்டி, 32, பென்னாகரம், 30, தர்ம-புரி நகராட்சி, 41, அரூர் பேரூராட்சி, 11, கடத்துார், 16, பொ.மல்-லாபுரம், 22, பாப்பிரெட்டிப்பட்டி, 10, காரிமங்கலம், 8, கம்பை-நல்லுார், 7, மாரண்டஹள்ளி, 18, பாலக்கோடு, 30, பாப்பாரப்-பட்டி, 7, பென்னாகரம், 9 என, 478 சுய உதவிக்குழுவை சேர்ந்த, 5,515 பயனாளிகளுக்கு, 58.92 கோடி ரூபாய் மதிப்பில், வங்கி இணைப்பு கடன்கள், தொழில் கடன்கள், தனி நபர் கடன்கள், மகளிர் சுய உதவிக்குழு வங்கிக்கடன் உதவிகள் வழங்கப்பட்டன.இதில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குனர் லலிதா, தி.மு.க., - எம்.பி., மணி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அன்பழகன், கோவிந்தசாமி, சம்பத், பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஜி.கே.,மணி, வெங்கடேஷ்வரன், கூட்டுறவு சங்-கங்களின் இணைப்பதிவாளர் மலர்விழி, உதவி திட்ட அலுவ-லர்கள் சந்தோசம், சஞ்சீவிகுமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராமஜெயம், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ