ஹிந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தி.மு.க., துண்டு பிரசுரம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகர, தி.மு.க., சார்பில், நகராட்சிக்கு உட்பட்ட பகு-திகளில் ஹிந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து நோட்டீஸ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது.கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் கோவிந்தசாமி முன்னிலை வகித்தார். நகர செயலாளர்கள் மேற்கு அஸ்லாம், கிழக்கு வேலுமணி ஆகியோர் ஏற்பாட்டின் பேரில், கிருஷ்ணகிரி ராயக்கோட்டை சாலையில் துவங்கி, புதிய பஸ் ஸ்டாண்ட் வழி-யாக லண்டன்பேட்டை பி.எஸ்.என்.எல்., அலுவலகம் வரை உள்ள வணிக நிறுவனங்கள், சாலையோர கடைகள் மற்றும் பொதுமக்களிடம், ஹிந்தி திணிப்பிற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினர்.இதில், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் லட்சுமிபிரியா, மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் புஷ்பா, நகர்மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.