மேலும் செய்திகள்
தாய்ப்பால் விழிப்புணர்வு கருத்தரங்கு
06-Aug-2024
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே, எட்டிப்பட்டி கிராமத்தை சார்ந்த தமிழ-ரசன் மற்றும் அவரது உறவினர்களுக்கும், முனியம்மாள், நாகராஜ் தரப்பினருக்கும் இடையே மீன் பிடித்தது தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இதில் காயமடைந்த இரு தரப்பினரும் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்-பாக, தர்மபுரி மாவட்டம், கோட்டப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நேற்று கோட்டப்பட்டி போலீசார், முனியம்மாளை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். தன் தாயை விடக்கோரி முனியம்மாளின் மகள் விசாலாட்சி, 29, தன் உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு, தன் சகோதரர் பிரசாந்த், 26, என்பவருடன், ஊத்தங்கரை ரவுண்டானா பகுதியில் தர்ணாவில் ஈடுபட்டார். சம்பவ இடம் வந்த ஊத்தங்கரை போலீசார், அவர்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.
06-Aug-2024