இளம்பெண் மாயம்
இளம்பெண் மாயம் கிருஷ்ணகிரி, டிச. 26-ஊத்தங்கரை அடுத்த கோவிந்தபுரத்தை சேர்ந்தவர் கிரிஜா, 24. கடந்த, 20ல், வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது கணவர் சிங்காரப்பேட்டை போலீசில் புகாரளித்தார். அதில், மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரை சேர்ந்த அறிவழகன், 30, என்ற வாலிபர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.