உள்ளூர் செய்திகள்

ரத்ததான முகாம்

ரத்ததான முகாம்ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே இயங்கி வரும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், ஓசூர் லயன்ஸ் சங்க ரத்த வங்கி, கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் அரசு மருத்துவமனைகள் ஆகியவை சார்பில், 3 நாட்கள் ரத்ததான முகாம், டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவன வளாகத்தில் நடந்தது. டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவன ஊழியர்கள் ரத்ததானம் செய்தனர். மொத்தம், 657 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது. ரத்ததானம் செய்த ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. கடந்த இரு ஆண்டுகளில், டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவன ஊழியர்கள் மொத்தம், 2,000 யூனிட்டுக்கு மேல் ரத்ததானம் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை