மேலும் செய்திகள்
திரவுபதி அம்மன் கோவில் தேரோட்டம்
12-Jun-2025
சூளகிரி, சூளகிரி அடுத்த உலகம் கிராமத்தில், பழமையான திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், உலகம், போகிபுரம், ராமாபுரம் குண்டட்டி, கூலியம் கொத்தகுறுக்கி, கெட்டூர், மீசகம்பட்டி ஆகிய, 8 கிராம மக்கள் சார்பில், திரவுபதியம்மன் திருக்கல்யாண விழா நேற்று நடந்தது. 8 கிராம மக்கள் தனித்தனியாக மேள, தாளம் முழங்க, மயிலாட்டம், காவடியாட்டம் ஆடியபடி, திரவுபதியம்மனுக்கு கல்யாண சீர்வரிசையை தலையில் சுமந்து வந்தனர். பக்தர்கள் பலர், ஈஸ்வரன், பார்வதி, காளி உள்ளிட்ட வேடுமணிந்து நடனமாடினர். திரவுபதியம்மன் மற்றும் அர்ஜூனனுக்கு, கிருஷ்ணர் திருமணம் செய்து வைக்கும் நிகழ்வு, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடந்தது. பக்தர்களுக்கு அறுசுவை உணவு பரிமாறப்பட்டன.
12-Jun-2025