மேலும் செய்திகள்
மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
14-Oct-2025
ஊத்தங்கரை, ஊத்தங்கரை, பி.டி.ஓ., அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டம் நடந்தது.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு, 100 நாள் வேலை வழங்க வேண்டும், அரசாணை, 52 முழுமையாக அமல்படுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு, 100 நாள் வேலையை தொடர்ச்சியாக வழங்க வேண்டும். நான்கு மணி நேர பணிக்கு முழு ஊதியம் வழங்க வேண்டும். வேலை செய்த நாட்களுக்கு நிலுவை தொகையை முழுவதும் வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.வட்ட தலைவர் குப்புசாமி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் திருப்பதி பேசினார். மாவட்ட துணைத்தலைவர் கோடீஸ்வரன், மாவட்ட பொருளாளர் ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
14-Oct-2025