உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூரில் தே.மு.தி.க., 20ம் ஆண்டு விழா

ஓசூரில் தே.மு.தி.க., 20ம் ஆண்டு விழா

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகர மாவட்ட தே.மு.தி.க., சார்பில், கட்சியின், 20ம் ஆண்டு துவக்க விழா, ஓசூர் தாலுகா அலுவலகம் முன் நேற்று கொண்டாடப்பட்டது. கட்சி நிறுவன தலைவர் விஜயகாந்த் படத்திற்கு, மாநகர மாவட்ட செயலர் ராம-சாமிரெட்டி தலைமையில், கட்சியினர் மலர் துாவி மரியாதை செலுத்தினர். பின், கட்சி கொடி ஏற்றப்பட்டது. மாநகர மாவட்ட அவைத்தலைவர் சரவணன், துணை செயலர் ராஜசேகர் உட்பட பலர் பங்கேற்றனர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டன. மாற்று கட்சியில் இருந்து விலகிய சிலர், தங்களை தே.மு.தி.க.,வில் இணைத்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி