உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கத்தி முனையில் 3 பவுன் நகை பறிப்பு

கத்தி முனையில் 3 பவுன் நகை பறிப்பு

கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே சின்னசீமனுாரை சேர்ந்தவர் தனபாக்கியம், 53; இவர் தன் மகன் ஞானவேலுடன், கிருஷ்ணகிரியில் ஜவுளிகள் வாங்கிக் கொண்டு டூவீலரில், கிருஷ்ணகிரி - பர்கூர் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த, 23- இரவு, 9:30 மணிக்கு திரும்பினார். அப்போது, 3 பேர் டூவீலரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி, தனபாக்கியம் அணிந்திருந்த, 3 பவுன் நகையை பறித்துச் சென்றனர். தனபாக்கியம் புகார் படி கந்திகுப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !