உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சாதனை படைத்த சிலம்ப மாணவர்கள்

சாதனை படைத்த சிலம்ப மாணவர்கள்

சாதனை படைத்த சிலம்ப மாணவர்கள் ஓசூர், நாமக்கல்லில் கடந்த, 26ல், நாமக்கல் வல்வில் ஓரி சிலம்பாட்டம் அசோசியேஷன் சார்பில், 'ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்' சிலம்ப உலக சாதனை நிகழ்வு நடந்தது. இதில் 3,000க்கும் மேற்பட்ட சிலம்ப மாணவர்கள் பங்கேற்றனர். கிருஷ்ணகிரி மாவட்ட சங்கம் சார்பில், ஓசூரிலிருந்து, 20 மாணவர்கள் பங்கேற்றனர். ஒரு மணி நேரம் இடைவிடாமல் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு சான்றிதழ் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. இந்த மாணவர்களுக்கு, ஓசூர் கோகுல் நகரில் பாராட்டு விழா நடந்தது. சிலம்பம் இந்திய சங்க பொதுச்செயலாளர் நாகராஜ், கிருஷ்ணகிரி மாவட்ட பொருளாளர் கிருஷ்ணன் மற்றும் செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர் ஆகியோர், உலக சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டுதெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை