உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தடகள போட்டியில் வென்ற மாணவியருக்கு பாராட்டு

தடகள போட்டியில் வென்ற மாணவியருக்கு பாராட்டு

தடகள போட்டியில் வென்றமாணவியருக்கு பாராட்டுஓசூர், ஆக. 30-ஓசூர், தெற்கு சரக அளவில், அதியமான் கல்லுாரியில் கடந்த, 27 மற்றும், 28 என, 2 நாட்கள் நடந்த தடகள போட்டியில், ஓசூர் புனித ஜான் போஸ்கோ மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர், 160 புள்ளிகள் பெற்று, ஒட்டு மொத்த, 'சாம்பியன் ஷிப்' பட்டத்தை வென்றனர். இப்போட்டியில், நர்மதா, 15 புள்ளிகளும், மானசா, 13 புள்ளிகளும் பெற்று, தனிநபர், 'சாம்பியன் ஷிப்' பட்டத்தை வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். விளையாட்டில் வெற்றி பெற்ற மாணவியரை, பள்ளி தாளாளர் அன்னை ஏஞ்சலா, தலைமை ஆசிரியை ஜெயந்தி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ