உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, கல்லுாரி கனவு தொடர்பான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது. இதை மாவட்ட கலெக்டர் சரயு துவக்கி வைத்து பேசுகையில், ''கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பாக மருத்துவம், யு.பி.எஸ்.சி., ஐ.ஐ.டி., விவசாயம் மற்றும் பல துறைகள் குறித்தும், மேலும் உயர் கல்வி படிப்பதற்கு, மத்திய அரசின் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் குறித்தும் மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்,'' என்றார்.நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ரமேஷ்குமார், தாட்கோ பொது மேலாளர் வேல்முருகன், உயர்கல்வி வழிகாட்டுதல் பயிற்சியாளர் இளையராஜா மற்றும் பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ