உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / என்.எஸ்.எஸ்., திட்ட முகாம்

என்.எஸ்.எஸ்., திட்ட முகாம்

ஊத்தங்கரை; கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் என்.எஸ்.எஸ்.,திட்ட முகாம் நேற்று நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் பிரிட்ஜிட் ரீட்டா மேரி தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தேவராஜன், உதவி தலைமை ஆசிரியர் தீபாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முதல் நாள் ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் சார்பில், நிலைய அலுவலர் பொறுப்பு ராமமூர்த்தி தலைமையில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடைமுறை பற்றிய செய்-முறை விளக்கம் செய்து காட்டினர். இரண்டாம் நாள் காசநோய் பற்றி கார்த்திகேயன் மற்றும் ஆகாஷ் ஆகியோர் விழிப்புணர்வு அளித்தனர். மூன்றாம் நாள் பேரூராட்சி மேற்பார்வையாளர் கிருபாகரன், இளநிலை உதவியாளர் மணிமொழி தலைமையில் மக்கும் குப்பை, மக்கா குப்பை பிரிக்கும் முறை நேரடியாக செய்து காண்பிக்கப்-பட்டது. தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகன், ஆசிரியர்கள் குப்புசாமி, தேவி,மாது மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ்., பொறுப்பாசிரியர்கள் விவேகா-னந்தினி மற்றும் கீதா ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை