உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

ஓசூர்: மா.கம்யூ., கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், ஜவளகிரி பஸ் ஸ்டாப்பில் நேற்று கண்-டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தளி ஒன்றிய தலைவர் சிவப்பா தலைமை வகித்தார். பொரு-ளாளர் அனுமப்பா முன்னிலை வகித்தார். மாநில துணை செயலாளர் பெருமாள், மாவட்ட செயலாளர் பிரகாஷ், தலைவர் முருகேஷ், பொருளாளர் ராஜீ, முன்னாள் மாவட்ட துணைத்-தலைவர் வெங்கடேசன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், ஓசூர் வனக்கோட்டத்தில், வனவிலங்கு சரணாலயம் என்ற பெயரில், வனப்பகுதியில் மேய்ச்சல் உரிமையை பறிக்கக்கூடாது.வனவிலங்கு உயிர் சேதம் மற்றும் பயிர் சேதங்-களை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ