லாரியில் சிக்கி டிரைவர் பலி
கிருஷ்ணகிரி, ஆக. 30-தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த பூவன்காட்டை சேர்ந்தவர் சங்கர், 33, லாரி டிரைவர். கடந்த, 28ல், கம்மம்பள்ளி கூட்ரோடு அருகே கிருஷ்ணகிரி - குப்பம் சாலையில் லாரியை நிறுத்திய சங்கர், லாரியின் முன்புற சக்கரத்தில் காற்று போதுமான அளவு உள்ளதா என சோதனை செய்தார். அப்போது லாரி முன்புறமாக நகர்ந்து, சங்கர் மீது ஏறியது. லாரி டயரில் சிக்கி காயமடைந்தவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்த நிலையில் இறந்தார். மகராஜகடை போலீசார் விசாரிக்கின்றனர்.