மேலும் செய்திகள்
நாமக்கல் உழவர் சந்தையில் 27 டன் காய்கறி விற்பனை
21-Oct-2024
ஓசூர்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஓசூர் உழவர் சந்தையில் நேற்று முன்தினம், 102 டன் காய்கறிகள் விற்பனையாகின.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் உழவர் சந்தையில் தினமும், 80 முதல், 90 டன் காய்கறிகள், பழங்கள் விற்பனையாகும். தினமும், 10,000 நுகர்வோர் வந்து செல்கின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஓசூரில் வசிக்கும் வெளிமாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டதால், நேற்று முன்தினம் தீபாவளியன்று காய்கறிகள், பழங்கள் விற்பனை குறைந்த அளவில் இருக்கும் என கருதப்பட்டது. ஆனால், வழக்கத்தை விட காய்கறிகள், பழங்கங்கள் அதிகளவில் விற்பனையாகின. ஓசூர் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த உள்ளூர் மக்கள், தீபாவளியை பண்டிகை மற்றும் அமாவாசை விரதம் இருந்ததால், நேற்று முன்தினம் மாலை மற்றும் நேற்று காலை காய்கறிகள், பழங்களை அதிகளவில் விரும்பி வாங்கினர்.ஓசூர் உழவர் சந்தையில் நேற்று முன்தினம் மட்டும், 200 க்கும் மேற்பட்ட கடைகளில் வியாபாரம் நடந்தது. மொத்தம், 102 டன் அளவிற்கு காய்கறிகள், 4 டன் பழங்கள் மற்றும் பூக்கள் போன்ற ஒன்றரை டன் இதர பொருட்கள் விற்பனையாகின. 13,500 நுகர்வோர் காய்கறி, பழங்கள் வாங்க வந்து சென்றனர். வழக்கமான நாட்களை விட ஓசூர் உழவர் சந்தையில் நேற்று முன்தினம், 12 டன் அளவிற்கு கூடுதலாக காய்கறிகள் விற்பனையாகி உள்ளன. ஆனால் நேற்று உழவர் சந்தையில் கடைகள் எண்ணிக்கை குறைந்து, விற்பனை குறைவாக இருந்தது.
21-Oct-2024