14 வயது சிறுமியை கடத்தியதொழிலாளி மீது போக்சோ
14 வயது சிறுமியை கடத்தியதொழிலாளி மீது 'போக்சோ'ஓசூர்:தளி அருகே தேவகானப்பள்ளியை சேர்ந்தவர் கவுதம், 20. கூலித்தொழிலாளி. கடந்த மாதம், 26ல், தோட்டத்தில் பணியாற்றி கொண்டிருந்தவர் மாயமானார். தளி போலீசார் விசாரணையில், தேவகானப்பள்ளியில் தங்கி கூலி வேலை செய்யும், உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த, 14 வயது சிறுமியை, திருமணம் செய்யும் நோக்கில் கவுதம் கடத்தி சென்றது தெரிந்தது. நேற்று முன்தினம் போக்சோ சட்டத்தில் கவுதமை கைது செய்த போலீசார், சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.