உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரூ.17 லட்சம் நிவாரணத்தொகை

ரூ.17 லட்சம் நிவாரணத்தொகை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்-திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சரயு தலைமை வகித்து, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 303 மனுக்களை பெற்றார். தொடர்ந்து, சாலை விபத்-துகளில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினர், 4 பயனாளிக-ளுக்கு, சமூக பாதுகாப்பு திட்டம் சார்பில், 15 லட்சம், தண்ணீரில் மூழ்கி இறந்த நபர்களின் குடும்பத்தினர், 4 பயனாளிகளுக்கு, 2 லட்சம் ரூபாய் என மொத்தம், 8 பயனாளிகளுக்கு முதல்வர் பொது நிவாரண உதவித்தொகை, -17 லட்சம் ரூபாய்க்கான காசோ-லையை வழங்கினார். டி.ஆர்.ஓ., சாதனைக்குறள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி