உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 17 வயது மனைவி கர்ப்பம் கணவருக்கு போலீஸ் வலை

17 வயது மனைவி கர்ப்பம் கணவருக்கு போலீஸ் வலை

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அடுத்த ஐ.பி., கானப்பள்ளியைச் சேர்ந்தவர் ஸ்ரீ கோபால், 22; பேக்கரி கடையில் வேலை பார்த்துள்ளார். இவர், அதே பகுதியைச் சேர்ந்த, 17 வயது சிறுமியை 2024 ஏப்., 22ல் பெற்றோருக்கு தெரியாமல் கடத்திச் சென்று திருமணம் செய்து, தன் வீட்டில் தங்க வைத்தார். பின்னர், அவர் தலைமறைவானார். சமீபத்தில் சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவரை அருகில் உள்ள மருத்துவமனையில், சிகிச்சைக்காக அழைத்துச் சென்றபோது, அவர் ஏழு மாத கர்ப்பமாக இருப்பதை டாக்டர்கள் உறுதி செய்தனர். தகவலறிந்த குழந்தைகள் நல அலுவலர் செல்வி, கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து ஸ்ரீ கோபாலை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை