உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / புகையிலை பொருட்கள் விற்ற 19 பேர் கைது

புகையிலை பொருட்கள் விற்ற 19 பேர் கைது

கிருஷ்ணகிரி,: கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் போலீசார் சோதனை நடத்-தினர். அதில், கிருஷ்ணகிரி டோல்கேட் அருகில் குட்கா விற்ற, தர்மபுரியை சேர்ந்த அன்புதுரை, 31, பெரிய தம்மண்டரப்பள்ளி மாதேஷ், 36, கே.பூசாரிப்பட்டி வெங்கடசாமி, 75, உள்பட மொத்தம், 19 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 13,700 ரூபாய் மதிப்புள்ள குட்கா மற்றும் ஒரு டூவீலரை பறிமுதல் செய்தனர்.அதே போல், கிருஷ்ணகிரி பழைய சப்--ஜெயில் சாலை பகுதியில் போலீசார் ரோந்து சென்றபோது, தடை செய்த லாட்டரி விற்ற பாரதியார் தெரு பாரூக், 46, பாப்பாரப்-பட்டி புகழேந்தி, 55, ஆகிய இருவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ