உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஆற்றில் மண் கடத்த முயன்றதாக 2 லாரி பறிமுதல்

ஆற்றில் மண் கடத்த முயன்றதாக 2 லாரி பறிமுதல்

கிருஷ்ணகிரி, :கெலமங்கலம் எஸ்.ஐ., மாயக்கண்ணன் மற்றும் போலீசார், பரந்துார் ஏரி அருகே நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அங்கு இரு லாரிகளில், ஆற்றோரத்தில் இருந்து மண் திருடிக் கொண்டிருந்தனர். போலீசாரை கண்டவுடன் அவர்கள் தப்பி ஓடினர். அங்கு சென்ற போலீசார், மண்ணுடன் இரு லாரிகளையும் பறிமுதல் செய்து, டிரைவர்களான கெலமங்கலம் அடுத்த வெங்கடாபுரத்தை சேர்ந்த ஆவேஷ், பேவேநத்தம் சீனிவாஸ், 24, லாரி உரிமையாளர்களான மாசிநாயக்கனப்பள்ளி சிவா, கிருஷ்ணமூர்த்தி மற்றும் லாரி கான்ட்ராக்டர் சங்கர், 45, ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி