அனுமதியின்றி மரம் ஏற்றி வந்த 2 லாரிகளுக்கு அபராதம்
அரூர்:மொரப்பூர் வனச்சரக அலுவலர் அருண்பிரசாத் தலைமையில், மொரப்பூர் பிரிவு வனவர் விவேகானந்தன், வனக்காப்பாளர் சதீஸ்குமார் ஆகியோர், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு அரூர் காப்புக்காடு பகுதியில் ரோந்துப்பணி மேற்கொண்டிருந்தனர். அப்போது, துரிஞ்சி, ஆயா, வேம்பு மற்றும் முள்வேலி விறகு மரங்களை ஏற்றி வந்த, 2 லாரிகளை நிறுத்தி செய்தனர். அதில், வீரப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த ராஜி, வெள்ளாளப்பட்டி நடராஜ் ஆகியோருக்கு சொந்தமான லாரிகள் என்பதும், உரிய அனுமதி சீட்டு இல்லாமல் மரங்களை ஏற்றி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, வனத்துறையினர் ராஜி, நடராஜ் ஆகியோருக்கு வனச்சரக அலுவலர் அருண்பிரசாத் தலா, 15,000 ரூபாய் வீதம், மொத்தம், 30,000 ரூபாய் அபராதம் விதித்து, எச்சரித்து அனுப்பினர்.