மேலும் செய்திகள்
236 சத்துணவு உதவியாளர் பணி விண்ணப்பிக்க அழைப்பு
11-Apr-2025
அரூர்:அரூர் ஒன்றியத்தில் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள, 22 உதவியாளர் பணியிடங்களுக்கு, 350க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.தர்மபுரி மாவட்ட திட்ட அலுவலகத்தில் கீழ், அரூர் ஒன்றியத்தில் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள, 22 உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து, அரூர் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில், உதவியாளர் பணியிடத்திற்கு, பட்டதாரி பெண்கள் உள்பட ஏராளமானோர் தினமும் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். நேற்று மாலை வரை, 350க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இன்று விண்ணப்பிக்க கடைசி.அதேபோல், அரூர் ஒன்றியத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக, 22 சத்துணவு சமையல் உதவியாளர் பணிக்கு, நேற்று வரை, 55 பேர் விண்ணப்பித்துள்ளனர். வரும், 30ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இதனால் விண்ணப்பங்கள் அதிகளவில் வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
11-Apr-2025