மேலும் செய்திகள்
தி.மு.க., பொதுக்கூட்டம்
22-Sep-2025
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பெருமாள் மணிமேகலை பாலிடெக்னிக் கல்லுாரியில் செயல்படும் தமிழ் பேரவை அமைப்பின், 22ம் ஆண்டு துவக்க விழா நடந்தது.பி.எம்.சி., டெக் கல்வி நிறுவனங்கள் தலைவர் குமார் தலைமை வகித்தார். செயலாளர் மலர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இயக்குனர் சுதாகரன், பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் பாலசுப்பிரமணியம் வாழ்த்தி பேசினர். தமிழ் பேரவை அமைப்பு தலைவர் சிவா வரவேற்றார். திருச்சி சோழமண்டல தமிழ் இலக்கிய கூட்டமைப்பு பொதுச்செயலாளர் சிவகுருநாதன், 'தமிழால் உயர்வோம்' என்ற தலைப்பில் பேசினார்.அப்போது, சங்க இலக்கியங்களில் தமிழர்களின் நாகரிக வாழ்க்கையும், தொழில்நுட்பங்களையம் நாம் அறிய முடியும். தமிழ் பேரவை அமைப்பு மூலம், மாணவர்கள் தமிழ் உணர்வை பெறுவதோடு மட்டுமின்றி, வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வழிகாட்டுதல்களையும் தன்னம்பிக்கையும் பெற முடியும் என்றார். தொடர்ந்து, 2025 - 26ம் கல்வியாண்டின் தமிழ் பேரவை பொறுப்பாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பி.எம்.சி.டெக் அகப்பொறி அமைப்பு ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார், தமிழ் பேரவை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த், செயலாளர் ரிஷிகா உட்பட பலர் பங்கேற்றனர்.
22-Sep-2025