2 பெண்கள் உட்பட 3 பேர் மாயம்
ஓசூர்,ஓசூர், புதிய ஏ.எஸ்.டி.சி., ஹட்கோ வி.ஓ.சி., நகரை சேர்ந்தவர் சிகாமணி மகள் சுபாஸ்ரீ, 22. கடந்த, 15ம் தேதி மதியம், 2:00 மணிக்கு, வீட்டை விட்டு வெளியே சென்றவர் மாயமானார். அவரது தந்தை ஓசூர் டவுன் போலீசில் கொடுத்த புகாரில், ஸ்ரீபெரும்புதுாரை சேர்ந்த சக்தி, 26, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.அஞ்செட்டி தாலுகாவை சேர்ந்தவர், 17 வயது சிறுமி. பிளஸ் 2 முடித்துள்ளார். கடந்த, 12 காலை, 8:00 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் மாயமானார். அவரது தாய் அஞ்செட்டி போலீசில் கொடுத்த புகாரில், தக்கட்டி அருஏக பேடரஹள்ளியை சேர்ந்த சூர்யா, 23, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் சிறுமியை தேடி வருகின்றனர்.உத்தனப்பள்ளி அருகே சின்ன பேட்டகானப்பள்ளியை சேர்ந்தவர் நாகேஷ் மகள் முத்து, 20. கடந்த, 15 இரவு, 10:00 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் மாயமானார்.அவரது அண்ணன் முரளி, 27, உத்தனப்பள்ளி போலீசில் கொடுத்த புகாரில், சின்ன பேட்டகானப்பள்ளியை சேர்ந்த அஜித், 22, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.