உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பட்டதாரி உட்பட 3 பேர் மாயம்

பட்டதாரி உட்பட 3 பேர் மாயம்

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் புதிய ஏ.எஸ்.டி.சி., ஹட்கோ துவாரகா நகரை சேர்ந்த விக்னேஷ், 27. கடந்த, 29ம் தேதி மாலை, 4:30 மணிக்கு, அதிக கடன் சுமை காரணமாக வீட்டிலிருந்து சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது தந்தை சுரேஷ்பாபு, 53, புகார்படி, ஓசூர் டவுன் போலீசார் தேடி வருகின்றனர்.*தளி அருகே கெபரேதொட்டி கிராமத்தை சேர்ந்தவர் சாமப்பா, 40. கூலித்தொழிலாளி; கடந்த, 20ம் தேதி இரவு, 7:00 மணிக்கு, கர்நாடகா மாநிலம், கலுகொண்டஹள்ளி கிராமத்திற்கு, தன் நண்பர் நாகமணி என்பவருடன் கூலிவேலைக்காக சென்றார். அதே நாளில் நாகமணி வீட்டிற்கு திரும்பினார். ஆனால், சாமப்பா திரும்பி வராததால், அவரது மனைவி பாக்கியா, 32, தளி போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். போலீசார் தேடி வருகின்றனர். * கிருஷ்ணகிரி, புதுப்பேட்டையை சேர்ந்தவர் நவீன்குமார், 22, பி.இ., பட்டதாரி. கடந்த, 25 மதியம் வீட்டில் இருந்து வெளியில் சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் காணவில்லை. இது குறித்து அவரின் பெற்றோர் புகார் படி, கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை