உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஊழியரிடம் ரூ.20,000 பறிப்பு 3 வாலிபர்களுக்கு காப்பு

ஊழியரிடம் ரூ.20,000 பறிப்பு 3 வாலிபர்களுக்கு காப்பு

ஊழியரிடம் ரூ.20,000 பறிப்பு3 வாலிபர்களுக்கு 'காப்பு'ஓசூர், நவ. 27-பாப்பிரெட்டிப்பட்டி அருகே, கத்திரிபுரத்தை சேர்ந்தவர் கவியரசு, 29. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அப்பாவு நகரில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்; கடந்த, 24 இரவு, 9:00 மணிக்கு, ஓசூர் இன்னர் ரிங்ரோட்டிலுள்ள பிரபல பிரியாணி ஓட்டல் பின்புறம், இயற்கை உபாதையை கழிக்க சென்றார். அப்போது அங்கிருந்த மர்ம நபர்கள், கவியரசு சட்டைப்பையில் இருந்த, 20,000 ரூபாயை பறித்து கொண்டு தப்பினர்.கவியரசு புகார் படி, ஓசூர் டவுன் போலீசார் விசாரித்தனர். இதில், ஓசூர் அருகே பத்தலப்பள்ளி பாஸ்கர் தாஸ் நகரை சேர்ந்த கார்த்திகேயன், 23, மற்றும் கேரள மாநிலம், ஆழப்புலா அருகே கண்ணமங்கலத்தை சேர்ந்த ஜித்து, 27, ஓசூர் கோட்டை மாரியம்மன் கோவில் அருகே வசிக்கும் விஜய், 24, ஆகியோர் பணத்தை பறித்து சென்றது தெரிந்தது. மூவரையும் நேற்று முன்தினம் கைது செய்த போலீசார், 20,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை