மெக்கானிக் உட்பட 4 பேர் மாயம்
கிருஷ்ணகிரி: ஓசூர் அடுத்த சென்னத்துாரை சேர்ந்தவர் திவ்யா, 28. இவர், தன் கணவர் முனிராஜிடம் கோபித்துக் கொண்டு கடந்த, 25ல், தன் 10 வயது மகன், 5 வயது மகளுடன் வீட்டை விட்டு வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது கணவர் புகார் படி, ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர். ஊத்தங்கரை அடுத்த செலகாரம்பட்டியை சேர்ந்தவர் மயில்சாமி, 43. ஊத்தங்கரை அரசு பஸ் டெப்போவில் மெக்கானிக்காக பணியாற்றி வந்துள்ளார். கடந்த, 25ல், பணிக்கு செல்வதாக கூறு சென்றவர் மாயமானார். அவரது தந்தை புகார் படி, ஊத்தங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.