உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மணல் கடத்திய 4 வாகனங்கள் பறிமுதல்

மணல் கடத்திய 4 வாகனங்கள் பறிமுதல்

போச்சம்பள்ளி: ஊத்தங்கரை டி.எஸ்.பி., சீனிவாசன் உத்தரவின்படி, தனிப்படை போலீசார் நேற்று அதிகாலை ரோந்து சென்றனர். அப்போது, டிம்பர் லாரியில், 5 யூனிட் மணல் அனுமதியின்றி எடுத்துச் சென்-றது தெரிந்தது. மணல் அள்ளிய மத்துார் அடுத்த, நடுப்பட்டு ஆற்றில் தனிப்படை போலீசார் சென்று பார்த்துபோது, அங்கு மணல் அள்ள பயன்படுத்திய பொக்லைன் இயந்திரம், மணல் கடத்திய டிம்பர் லாரியை பறிமுதல் செய்து, மத்துார் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் பொக்லைன், டிம்பர் லாரி ஓனர், டிரைவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.* கிருஷ்ணகிரி மாவட்ட சுரங்கம் மற்றும் கனிமங்கள் துறை சிறப்பு தாசில்தார் பாரதி மற்றும் அதிகாரிகள், இட்டிக்கல் அகரம் கிராமத்திலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளி அருகே ரோந்து சென்-றனர். அப்போது, அரசிடம் உரிய அனுமதி பெறாமல், புறம்-போக்கு நிலத்தில் இருந்த பாறைகளை வெட்டியது தெரிந்தது. இதனால், பொக்லைன் வாகனம் மற்றும் டிராக்டரை பறிமுதல் செய்த அதிகாரிகள், கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் ஒப்படைத்-தனர். போலீசார் டிராக்டர் மற்றும் பொக்லைன் டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ