உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூரில் காரில் கஞ்சா கடத்திய டாக்டர் உட்பட 5 பேர் கைது

ஓசூரில் காரில் கஞ்சா கடத்திய டாக்டர் உட்பட 5 பேர் கைது

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, கப்பக்கல் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக, ஓசூர் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் மஞ்சுளா தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர். அப்பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றும், மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த ரவீந்திரநாத் சாஹூ, 25, பீஹாரை சேர்ந்த ஷர்வன்குமார், 29, ஆகியோரிடம் இருந்து, 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.இதேபோல் பேரிகை போலீசார், முதுகுறுக்கி பகுதியில் நேற்று முன்தினம் வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த இரு கார்களில் ஒரு கிலோ கஞ்சா, 96 பாக்கெட் கர்நாடகா மது பானம் இருந்தது. விற்பனை செய்யும் நோக்கில் கடத்தி செல்வது தெரிந்தது. காரில் இருந்த பெங்களூரு ஜெ.பி.நகர் பாலாஜி, 35; பீஹார் ரஜ்னீஷ்குமார், 42; கோவாவை சேர்ந்த பிசியோதெரபி டாக்டர் இக்னாதிஷ், 47, ஆகியோரை கைது செய்தனர். கஞ்சா மற்றும் இரு கார்களை பறிமுதல் செய்தனர்.கைதான, 3 பேரிடம் பேரிகை போலீசார் விசாரித்த போது, முதுகுறுக்கி பகுதியிலுள்ள தனியாருக்கு சொந்தமான, 4 ஏக்கர் தென்னந்தோப்பை குத்தகைக்கு எடுத்து, டி.ஜே., சவுண்டுடன் கூடிய, இரவு நடன நிகழ்ச்சி நடப்பதும், அவர்களுக்கு வழங்க கஞ்சாவை கொண்டு செல்வதும் தெரிந்தது. மூவரையும், அங்கு போலீசாார் அழைத்து சென்றபோது, ஐ.டி., நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், மாணவ, மாணவியர் என, 100க்கும் மேற்பட்டோர் போதையில், அரை நிர்வாணத்துடன் ஆடி, பாடியடி பார்ட்டி நடந்தது தெரிந்தது. அங்கிருந்த போதை பொருட்கள், கஞ்சா மற்றும் விலை உயர்ந்த மதுபானங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை