உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / நீச்சல் போட்டியில் 750 மாணவ, மாணவியர்

நீச்சல் போட்டியில் 750 மாணவ, மாணவியர்

கிருஷ்ணகிரி வருவாய் மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில், 750க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், பள்ளிக் கல்வித்துறை சார்பில், வருவாய் மாவட்ட அளவிலான நீச்சல் போட்டிகள், நேற்று முன்தினம் மாணவர்களுக்கும், நேற்று மாணவியருக்கும் நடந்தது. இதில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த, 14, 17 மற்றும், 19 வயது பிரிவில், 600க்கும் மேற்பட்ட மாணவர்களும், 150க்கும் மேற்பட்ட மாணவியரும் பங்கேற்றனர். விளையாட்டு போட்டிகளை, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி துவக்கி வைத்தார். மாணவ, மாணவியருக்கு, 50 மீ., 100 மீ., 200 மீ., 400 மீ., ப்ரீ ஸ்டைல், பேக் ஸ்டோக், ப்ரஸ்ட் ஸ்டோக், பட்டர்பிளை ஸ்டைல், மெட்லே ரீலே உள்ளிட்ட, 17 வகையான நீச்சல் போட்டிகள் நடத்தப்பட்டன. இதை, பொறுப்பு நடுவர் சுரேஷ்பாபு, உடற்கல்வி இயக்குனர் மாதேஷ், உடற்கல்வி ஆசிரியர்கள் பீமாபாய், மலர், பொற்கொடி, வேல்மணி மற்றும் மாவட்ட விளையாட்டு அரங்க நீச்சல் பயிற்சியாளர்கள் நடத்தினர். போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடிக்கும் மாணவ, மாணவியர், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி