வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நல்ல மழை பெய்தது சூப்பரா இருக்கு.
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 786.20 மி.மீ., மழை கொட்டி தீர்த்ததால், சாலையில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, 17, 18 என இரு நாட்கள் இரவில் கனமழை கொட்டி தீர்த்தது. அதேபோல் நேற்று காலை சாரல் மழை பெய்த நிலையில், மாலையில் கனமழை கொட்டியது. தொடர் மழை காரணமாக, மானாவாரி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நேற்று காலை, 7 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிக பட்சமாக கெலவரப்பள்ளி அணையில், 80 மீ.மீ., மழை பதிவானது.அதேபோல் பெனுகொண்டாபுரம், 76.20, நெடுங்கல், 69.20, கிருஷ்ணகிரி, 67.60, தேன்கனிக்கோட்டை, 62, பாரூர், 55, போச்சம்பள்ளி, 55.30, பாம்பாறு அணை, 52, ஊத்தங்கரை, 47.20, ஓசூர், 46.30, கே.ஆர்.பி., அணை, 40.40, சின்னாறு அணை, 40, சூளகிரி, 36.2, தளி, 20, அஞ்செட்டி, 18.80 என மொத்தம், 786.20 மி.மீ., மழை பெய்துள்ளது.தேன்கனிக்கோட்டை அருகே அந்தேவனப்பள்ளி யில் பெய்த கனமழையால், சாலையோரத்தில் இருந்த மரம் சாலையில் விழுந்தது. அதனால், தேன்கனிக்கோட்டை -அஞ்செட்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறையினர் மரத்தை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.ஓசூர் பஸ் ஸ்டாண்ட், அமேரியா பெட்ரோல் பங்க் முன் உள்ள சாலைகளில், மழைநீர் குளம் போல் தேங்கியது. ஓசூர் மூக்கண்டப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில், பாலத்தை ஒட்டியுள்ள சர்வீஸ் சாலை மற்றும் தோப்பம்மா கோவிலில் மழைநீர் சூழ்ந்தது. ஓசூர் குமுதேப்பள்ளி, திப்பாளம், ஆர்.ஆர்.கார்டன் சுற்றுப்புற பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழை காரணமாக மின்தடை செய்யப்பட்டிருந்தது. அதனால், மக்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.
நல்ல மழை பெய்தது சூப்பரா இருக்கு.